Blog - Importance of a Website

  • Importance of a Website Importance of a Website
    • News / By Thariq Ahamad / 0 Comments / 3403 Views

    முதன்முதலில் எப்படி ஒரு தொழில் துவங்குவதற்கு முன்னால் பதிவுசெய்தல், வணிக அட்டை (Business card) செய்கிறோமோ, அதுபோல இணையம் மூலமாக தொழில் செய்ய விரும்புவோர் அல்லது அவர்களது தனித் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் அவர்களுடைய முகவரியை பதிவு செய்யவெண்டும். இப்பொழுது சாதாரணமாக சமூக வலைதளம் வந்ததால் முகவரி பயன்படுத்தத் தேவையில்லை, முகநூலிலே நான் கணக்கு ஆரம்பித்துக்கொள்கிறேன் என்ற நோக்கத்துடன் இருக்கிறார்கள். அது குறுகிய காலத்துக்கு இருக்கலாம், சொல்லமுடியாது. அதெல்லாம் சமீப காலமாக வந்த ஒரு புதிய தொழில்நுட்பம். ஆனால் இந்த இணைய முகவரி என்பது இணையம் வந்த காலத்திலிருந்து அதாவது .com, .in, .org என்று சொல்கிறோம் இல்லையா அந்த முகவரி எல்லாம் இணையம் வந்த காலத்திலிருந்தே இருந்துகொண்டிருக்கிறது. எவ்வளவு பெரிதாக நமது தொழில்நுட்பம் மாறினாலும் அலைபேசி இல்லாத காலத்திலிருந்தே எப்பொழுதெல்லாம் நாம் மின்னஞ்சல் பயன்படுத்த ஆரம்பித்தோமோ அப்பொழுதிலிருந்தே இந்த இணையதள முகவரி அதாவது website address என்று சொல்லுவோம் அதனை பதிவு செய்யவேண்டும். இணையத்தின் மூலமாக தொழில் செய்ய விரும்புபவர்கள் எல்லோரும் .com, .in முகவரியை பதிவுசெய்ய வேண்டும். நிறைய நபர்களுக்கு அதன் முக்கியத்துவம் தெரிவதில்லை.

    ஏனென்றால் இன்றைக்கு நம் தொழில்நுட்பம் என்ன இருக்கிறதோ அதை பயன்படுத்தியே நாம் செய்துகொள்ளலாம் இணைய முகவரி தேவையில்லை என்று நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் அதுதான் நமக்கு நிரந்தரமான முகவரி. எப்படி நாம் சொந்த வீடு, சொந்த கார் வைத்திருப்பது போல் ஒரு சொந்த இணைய முகவரி அனைவருக்கும் தேவை. அது தனிப்பட்ட மனிதனாகவும் இருக்கலாம், குறுந்தொழில் செய்ய வருபவர்களுக்கு முக்கியமாக தொழில் செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள், முக்கியமாக சிறுதொழில் ஏனென்றால், பெரிய நிறுவனங்கள் ஏற்கனவே பிரபலமாக இருக்கும், அதனது முகவரியை தட்டச்சு செய்து சாதாரணமாகவே தேடி வந்துவிடுவார்கள். சிறுதொழில் புரிபவர்கள் தாங்களே தங்களைதான் வெளிப்படுத்தியாகவேண்டும், அப்பொழுது இந்த முகவரி கண்டிப்பாக தேவைப்படுகிறது. இன்னொருவரிடம் சொல்லும் பொழுதோ, அல்லது வணிக அட்டை (Business card)ல் போடும்போழுதோ, மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளும் பொழுதோ இந்த முகவரி கண்டிப்பாக பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும்.

    நாம் எப்படி தொழிலுக்கு ஒரு பெயர் வைக்கிறோமோ அதேமாதிரி இந்த இணைய முகவரிக்கு அது சம்பந்தமான ஒரு இணையதள முகவரி அதாவது domain name என்று சொல்வார்கள் அதுதான் இணைய முகவரி, இதனை domain name-ஐ கண்டிப்பாக முக்கியமாக பதிவுசெய்தே ஆகவேண்டும். இணையமுகவரியை பதிவுசெய்த பின் அவர்களைப் பற்றிய விவரங்களை, அதாவது யார் அந்த நிறுவனத்தை துவங்குகிறார்கள், அவர்கள் பற்றிய செய்தி, அனுபவம் என்ன, என்னென்ன பொருட்கள் வைத்திருக்கிறார்கள், என்னென்ன சேவைகள் செய்யவேண்டும் என நினைக்கிறார்களோ அதன் விவரங்கள், இணையதளத்தைப் பார்க்கிறவர்கள் எப்படியெல்லாம் தொடர்பு கொள்ளலாம் (Contact Address) என்பதை கண்டிப்பாக சேர்க்க வேண்டும். இந்தத் தகவல்கள் எல்லாம் ஒரு இணையதளமாக ஏற்படுத்தி இணையதளத்தில் போட்டார்கள் என்றால் கண்டிப்பாக பல லட்சக்கணக்கான மக்கள் பார்ப்பதற்கு வாய்ப்பு உண்டு. முன்பெல்லாம் யாரையாவது பார்த்தால் brochure அனுப்புவோம், ஏதாவது கண்காட்சிக்குச் சென்றால் பார்ப்பவர்களிடம் எல்லாம் ஒரு brochure -ஐ கொடுப்போம். இப்பொழுது காலம் மாறிவிட்டது, எல்லோருமே உங்களது இணைய முகவரி என்ன என்றுதான் கேட்பார்கள். brochure-ஐ யாரும் பயன்படுத்துவது இல்லை. நாம் மின்னஞ்சல் அனுப்பும் பொழுதும் இலவச மின்னஞ்சல் மூலமாக அனுப்பாமல் நம்முடைய சொந்த மின்னஞ்சல் முகவரியிலிருந்தே மின்னஞ்சல் அனுப்பினால் இன்னும் நம்முடைய இணையதளம் பிரபலமாவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.

    Leave a Comment

  • Recent Blog Posts
    Blog Categories
    Login